புதிய சிவில் ஓய்வூதியங்களைத் தயாரித்தல்
ஓய்வூதியத் திட்டத்தில் கடைசியாக பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ஓய்வூதியக் கோப்பை பெற்றுக்கொண்ட பிறகு, ஓய்வூதியத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் ஆவணங்ளை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஓய்வூதிய அடையாள அட்டை
- சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்பட்ட வதிவிட சான்றிதழ்
- வங்கியின் புத்தகத்தின் முதல் பக்கத்தின் ஒரு நகல்
- ஓய்வு அறிவிப்பு
விதவைகளுக்கான ஓய்வூதியங்களைத் தயாரித்தல்
ஓய்வூதியம் நிறுத்துவதற்கு ஓய்வூதியம் பெறுபவர் இறந்ததும் அது பற்றி எங்கள் அலுவலகத்திற்கு அறியத் தரல் மற்றும் இறப்புச் சான்றிதழ் கோவை அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றதும் இறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் விதவைகள் 'ஓய்வூதிய இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு விதவை ஓய்வூதியம் கோரி ஒரு கடிதம் சமர்ப்பிக்கப் படல் வேண்டும். ஓய்வூதிய திணைக்களத்தில் விதவைகள் அநாதைகள் பிரிவிலிருந்து விதவைகள் அநாதைகள் ஓய்வூதியக் கோவை எங்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்ப பட்டுள்ளமையை குறிப்பிட்டு ஒரு கடிதம் கிடைத்தததும் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- திருமண சான்றிதழ்
- பெயரில் ஒரு வேறுபாடு இருந்தால், ஒரு வாக்குமூலம்
- மரண சான்றிதழின் அசல் நகல்
- ஓய்வூதியம் பெறும் சம்பளத் தாளின் நகல்
- 21 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
- 3 ¼, 2 ¼ அளவு புகைப்படங்கள் மூன்று - கிராம உத்தியோகத்தர் பரிந்துரையுடன் வழங்கப் பட வேண்டும்
- தேசிய அடையாள அட்டை
- சிறிய படிவத்தை கிராம உத்தியோகத்தருக்கு சமர்ப்பிக்கவும்
- ஓய்வூதியம் நிறுத்தப்படுதல் பற்றி பிரதேச செயலகத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு கடிதம்
- விதவை / தபுதாரர் பிறந்த சான்றிதழ்
ஓய்வூதிய நிதி படிவம் 15 மற்றும் கிராம உத்தியோகத்தரிடம் இருந்து பெறப்படும் ஏனைய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அனாதைகளுக்கான ஓய்வூதியங்களைத் தயாரித்தல்
இறப்புச் சான்றிதழ் கோவை எங்கள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றதும் ஓய்வூதிய திணைக்களத்தில் விதவைகள் அநாதைகள் பிரிவிலிருந்து விதவைகள் அநாதைகள் ஓய்வூதியக் கோவை எங்கள் பிரதேச செயலகத்திற்கு அனுப்ப பட்டுள்ளமையை குறிப்பிட்டு ஒரு கடிதம் கிடைத்தததும் அநாதை பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- குழந்தை பிறப்புச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் மரண சான்றிதழ்கள்
- தாய் மற்றும் தந்தை திருமண சான்றிதழ்
- பாதுகாவலர் 18 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் 21 க்கு மேற்பட்ட 5 / 1.6,7,8 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அங்கவீனர்களுக்கான ஓய்வூதியம் தயாரித்தல்
பெற்றுக்கொணடிருந்த ஓய்வூதியம் அல்லது விதவையின் ஓய்வூதியம் நிறுத்தவதற்கு ஓய்வூதியம் பெறுபவர் இறந்த்தும் எங்கள் நிறுத்தவதற்கு அது பற்றி எங்களுடைய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். பின்வரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்..
- நிரந்தரமாக ஊனமுற்ற நபர்களுக்கான ஊனமுற்ற ஓய்வூதியம் (ஊன 01) மற்றும்
- பாதுகாவலர்கள் ஊனமுற்ற சிறுவன்/ சிறுமியின் பாதுகாவலர்களில் வழங்கும் வாக்குமூலத்தின் (ஊன 02)
இயலாமை ஓய்வூதியம் தொடர்பான அடிப்படை சோதனைகளுக்காக எம்மால் வழங்கப்படும் நாள் மற்றும் நேரத்தின் போது எங்களது அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும். பாதுகாவலரும் தேவைப்பட்டால், அந்த நபரும் ஆரம்ப பரிசோதனைகளில் இருக்க வேண்டும்
வாரிசுக் கொடுப்பனவு
- ஓய்வூதியம் அல்லது விதவையின் ஓய்வூதியத்தை நிறுத்த எங்கள் பிரதேச செயலகத்திற்கு அது பற்றி அறியத் தரல்
- அசல் மரண சான்றிதழ்
- இத்தொகையை ஒருவருக்கு வழங்குவதில் ஏனைய வாரிசுகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கும் சமாதான நீதியரசரால் கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதம்(திருமணமான / திருமணமாகாத அனைவரிடமிருந்தும்)
- குடும்பத்தின் உரமையாளர்களாயின் , மரணித்தவருக்கு உள்ள உறவு முறை, வயது, பாலினம், குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விபரம் அடங்கிய கிராம சேவகர் அறிக்கை ( அதை பிரதேசசெயலார் உறுதிப்படுத்த வேண்டும்)
- படிவம் 77
- இந்தப் பணத்தை ஒரு காசோலை மூலம் செலுத்த வேண்டியதால் வங்கி கணக்கின் எண் மற்றும் வங்கியின் பெயரை குறிப்பிடவும்.
- சிவில் (படிவம் இலக்கம் 128)
- விதவைகள் (படிவம் இலக்கம் 129)
- அங்கவீனர் (படிவம் இலக்கம் 130)
ஓய்வூதிய அடையாள அட்டை தயாரிப்பு
- சேதமடைந்த அடையாள அட்டை
- கிராம சேவகர் 3/2 * 2¼ அங்குலங்களின் இரண்டு புகைப்படங்களை சான்றளித்தல்.
- கோரிக்கை கடிதம்














